தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

Photo of author

By Divya

தலைவலி வந்தால் இதை செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்!!

Divya

தினந்தோறும் நாம் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.இந்த பாதிப்பு நமது வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.

தலையில் கல் அழுத்துவது போன்ற உணர்வு,தலைபாரம்,தலையில் ஊசி குத்துவது போன்ற உணர்வு போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும்.தலைவலி வந்தால் அவை குணமாவதற்குள் பாடாய் படுத்திவிடும்.

இந்த தலைவலி பாதிப்பை மருந்து,மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

1)பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.சூடு பொறுக்கும் அளவிற்கு வந்த பின்னர் கால்களை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குணமாகும்.

2)தலைவலி குணமாக வெது வெதுப்பான தண்ணீரில் சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிக்கலாம்.தலைவலி குறைய சூடான நீர் கொண்டு ஆவி பிடிக்கலாம்.

3)தினமும் 8 முதல் 10 மணி நேர தூக்கத்தை அனுபவித்தால் தலைவலி பாதிப்பு வராது.மூலிகை பானம் குடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

4)தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீர் குளியல் போட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

5)தலைவலி பாதிப்பு குணமாக உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் பருகலாம். தலைக்கு பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

6)கொத்தமல்லி,சுக்கு போன்றவற்றை இடித்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி குணமாகும்.

7)எண்ணையை லேசாக சூடாக்கி தலை மற்றும் நெற்றி பகுதியில் ஊற்றி மசாஜ் செய்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

8)ஆப்பிள் சீடர் வினிகரை சூடான நீரில் கலந்து காட்டன் துணையை அதில் போட்டு நினைத்து நெற்றி மீது பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.