பீரியட்ஸ் டைமில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!!
பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.சில பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.சிலருக்கு மாதவிடாயின் போது அதிக வலி மற்றும் உதிரப்போக்கு உண்டாகும்.
இவ்வாறு அதிக உதிரப்போக்கு பாதிப்பை சந்திக்கும் பெண்கள் உடலளவில் சோர்ந்து விடுகின்றனர்.அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால் வெளியில் சென்று வருவது மிகவும் சிரமமான ஒன்றாகிவிடும்.
எத்தனை முறை நாப்கின் மாற்றினாலும் உதிரப்போக்கால் பெண்கள் அசௌகரிய சூழலை தான் சந்திக்கின்றனர்.ஹார்மோன் சமநிலையின்மை,இடுப்பு அழற்சி நோய்,கருப்பை நீர்க்கட்டி,அடினோமயோசிஸ்,பாலிப்ஸ் போன்றவை அதிகப்படியான உதிரப்போக்கிற்கு காரணமாக உள்ளது.
மாதவிடாய் உதிரப்போக்கு குணமாக உதவும் வீட்டு வைத்தியம்:
1)ஆப்பிள் சைடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – 1/4 லிட்டர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவு படி சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடித்தால் மாதவிடாய் உதிரப்போக்கு குணமாகும்.
1)பெருஞ்சீரகம்
2)தண்ணீர்
ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை லேசாக வறுத்து ஒரு கப் நீரில் சேர்க்க வேண்டும்.இதை ஒரு இரவு ஊறவிட்டு மறுநாள் காலையில் அருந்தினால் அதிகப்படியான உதிரப்போக்கு குணமாகும்.
1)இஞ்சி
2)தண்ணீர்
இஞ்சி தூண்டை தோல் நீக்கி தட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் மாதவிடாய் இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும்.
1)வெந்தயம்
2)தண்ணீர்
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்ஸி அல்லது உரலில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்த வெந்தியப் பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் மாதவிடாய் இரத்த போக்கு குணமாகும்.