பூண்டுடன் இதை சேர்த்து குடித்து வர வாயுத்தொல்லை நிமிடத்தில் மறைந்து விடும்!

0
244
Add this to garlic and drink it and gas will disappear in minutes!
Add this to garlic and drink it and gas will disappear in minutes!

அனைவரும் இன்று சந்திக்கும் பிரச்சனை வாயு தொல்லை, உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே இந்த பிரச்சனைக்கு வழி வகுத்து விடுகிறது. நெஞ்செரிச்சல், உடல் வலி, புளித்த ஏப்பம் வருதல், வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைகள் இந்த வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தான் தெரியும்.

இதனை நிமிடத்தில் சரி செய்யக் கூடிய இயற்கை வைத்தியத்தை நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம்

2. மிளகு

3. பூண்டு.

செய்முறை:

1. 150 மில்லி லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

2. இந்த தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்கு சீரகத்தை சேர்க்கவும்.

3. பின் பச்சை மிளகு இருந்தால் நான்கைந்து மிளகை போடவும். அல்லது மிளகு பொடியாக வைத்திருந்தால் மூன்று சிட்டிகை போடலாம்.

4. பின் ஒரு பல் பூண்டை எடுத்து இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

5. இந்த 150 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி 75 மில்லி லிட்டர் வரும்வரை சுண்டக் காய்ச்சவும்.

6. இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த தண்ணீரை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் மிதமான சூட்டில் குடித்து வர பத்தே நிமிடத்தில் ஏப்பம் வர ஆரம்பிக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய வாய்வு தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்பசம் ஆகிய அனைத்தும் சரியாகிவிடும்.

Previous articleவெறும் சாதம் போதும் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்!
Next article2 நாளில் படர்தாமரை எங்கே இருந்தாலும் முற்றிலுமாக குணமாக சில குறிப்புகள்!