3 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் இயற்கை முறையில் கை சிவக்க இதை பண்ணுங்க!

0
387

மருதாணி இலை உங்க வீட்டில் இல்லையா? மருதாணி இல்லாமல் கையில் இயற்கையான முறையில் எப்படி மருதாணி வைப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. டீ தூள் 3 ஸ்பூன்

2. வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன்

3. சீரகம் 1 ஸ்பூன்

4.குங்குமம்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரம் வேண்டும். அது நீங்கள் பயன்படுத்த தேவை இல்லாத பழைய பாத்திரமாக இருக்க வேண்டும்.

2. அதை அடுப்பில் வைத்து அதை சுற்றி 3 ஸ்பூன் டீ தூளை போடவும்.

3. பின் 2 ஸ்பூன் சர்க்கரையை போடவும்.

4. ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.

5. இப்பொழுது சின்ன கிண்ணம் எடுத்து பாத்திரத்தில் நடுவே வைக்கவும். இந்த கிண்ணம் தேவை இல்லாததாக இருக்க வேண்டும்.

6. இப்பொழுது ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்திருக்கும் பழைய பாத்திரம் மீது மூடி வைக்கவும்.

7. ஒரு 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விடவும்.

8. இபொழுது அந்த உள்ளே உள்ள கிண்ணத்தை பார்த்தால் அதில் தண்ணீர் இருக்கும்.

9. அதனை எடுத்து ஒரு பௌலில் ஊற்றி கொள்ளவும்.

10. இதில் குங்குமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கெட்டியாக கலந்து கொள்ளவும்.

11. இப்பொழுது காது குடையும் பஞ்சு வைத்து கையில் மருதாணி வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் அழியாது.

 

Previous articleவெங்காயத்தை இப்படி தேய்த்தால் ஒரு முடி கொட்டாது! முடி வேகமாக வளரும்!
Next articleஆன்லைன் கேமால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட இளைஞர்:! கலங்க வைக்கும் காரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here