குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் அனைத்து புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.இதைதொடர்ந்து ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.

நகல் கார்டுக்கு 20 ரூபாய் என அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ரேஷன் கார்டுகளை வழங்க அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே காலம் நீட்டிப்பதற்காக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சலில் அனுப்பும் திட்டத்திற்கான  ஏற்பாடுகளை அரசு செயல்படுத்தி  வருகின்றது. அதற்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் 15 நாட்களுக்களில் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் தற்போது அஞ்சல் மூலமாக அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் விரைவில் ரேசன் கார்டுகளை பெற்று ,அரசு வழங்கும் இலவச பொருட்களை வங்கி மகிழ்வார்கள்.இதன்மூலம் ரேசன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தமிழக மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.