பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!
பிடித்த வேலை அல்லது ப்ரோமோஷன் கிடைக்க பரிகாரம்:-
இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் பிடித்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நாம் எடுக்கும் முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் நிச்சயம் பிடித்த வேலை, இருக்கின்ற வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும்.
ஒரு தேங்காய் வாங்கி இரண்டாக உடைத்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளவும். அடுத்து தேங்காய்க்குள் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்யவும்.
ஒரு பித்தளைத் தட்டில் பச்சரிசி பரப்பி அதில் இந்த தேங்காய் விளக்கை வைத்து சுற்றி பூவால் அலங்கரித்து தூப தீபம் காட்டவும்.
அப்பொழுது உங்கள் வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த பூஜை காலை 11 முதல் 12 மணிக்குள் செய்யவும். இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்யவும்.
விளக்கு தானாக வளர வேண்டும். பின்பு அரிசியை ஊற வைத்து அந்த தேங்காயை துருவி வெல்லம் கலந்து பசுவிற்கு தானம் செய்யலாம்.
இது செய்ய முடியாதவர்கள் தேங்காயை கால் படாத இடத்தில் போட்டு விட்டு அரிசியை மிக்ஸி ஜாரில் அரைத்து மரத்திற்கு கீழே எறும்புகளுக்கு போடலாம். மூன்றாவது திங்களுகுகள் உங்கள் வேண்டுதல் நிறைவேறினாலும் ஐந்தாவது திங்கள் வரை இதை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் விருப்பமான வேலை, ப்ரோமோஷன் இதில் எதை நினைத்து பரிகாரம் செய்தோமோ அவை ஐந்து திங்களுக்குள் நிச்சயம் நடந்து விடும்.