உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல விதமான விஷயங்களையும் பாதித்து அனைத்திற்கும் தடையாக இருக்கும்.

பல வகையான சாபங்களில் இந்த 11 சாபங்கள் மிகவும் பாதிப்புகள் தரக் கூடியவை. அவை பெண் சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், கங்கா சாபம், விருக்க்ஷ சாபம், தேவ சாபம், முனி சாபம், ரிஷி சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை.

இப்படி ஏதும் சாபம் நமக்கு இருக்கிறதோ என்று ஜாதகத்தின் மூலமோ அல்லது வேறு விதத்திலோ கண்டறிந்து அதிலுருந்து விடுபட வேண்டும்.

பெண் சாபம்: ஏன் நம்மைத் தொடர்கிறது…

நம் முன்னோர்களோ அல்லது நாமோ பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியிருந்தால்… நம் உடன் பிறந்த அக்கா அல்லது தங்கை துன்பப் படுவதைப் பார்த்து அமைதியாக இருந்தால்…

மனைவிக்கு துரோகம் செய்வது அல்லது அவள் மீது வீண் பழி சொல்லி வெளியேற்றுவது அல்லது அவளை விட்டு விட்டு பிரிந்து செல்வது…

பெண் சாபம்: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

வம்சத்தை அழித்து விடும். நம் பெண் குழந்தைகள் அதிக துன்பத்தை அனுபவிக்கும் சூழல் ஏற்படும்.

பெண் சாபம்: இதிலிருந்து எப்படி விடுபடுவது…

துன்பப்படும் பெண்களுக்கு உதவி செய்தல்

புடவை தானம் செய்தல்

உணவு தானம் செய்தல்

பெண் குழந்தை படிக்க உதவி செய்தல்

அம்மன் வழிபாடு – குல தெய்வ வழிபாடு செய்து அவர்களை சாந்தப்படுத்தி மன்னிப்பு கேட்பது

இவ்வாறு செய்வதன் மூலம் சாபம் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.