திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமண யோகம் கூடி வர மாப்பிளை தேடும் பெண் செய்ய வேண்டியவை:

தேவையான பொருட்கள்:-

*அகல் விளக்கு – 2

*மருதாணி இலை – 2

*மஞ்சள் திரி – 1

*நல்லெண்ணெய் – தேவையான அளவு

பரிகாரம் செய்யும் முறை…

வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை போட்டு அதனுடன் மஞ்சள் திரி போட்டு விளக்கேற்றவும். பின்னர் சன்னதியில் உள்ள அம்மனிடத்தில் வரன் சீக்கிரம் அமைந்தால் திருமணத்தை மண்டபத்தில் நடத்தாமல் எதாவது பெரிய கோயிலில் நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 5 வாரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்யவும். விரும்புபவர்கள் வரவேற்பை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம்.

பெண் தேடும் மாப்பிள்ளை செய்ய வேண்டியவை:

தேவையான பொருட்கள்:-

*அகல் விளக்கு – 2

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*மருதாணி இலை – 2

*மஞ்சள் திரி – 1

பரிகாரம் செய்யும் முறை…

ஞாயிறு அல்லது புதன் கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து விட்டு புதிதாக வாங்கிய அகல் விளக்கு இரண்டை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு செல்லவும்.

பின்னர் அந்த விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றிலும் 2 மருதாணி இலைகளை போட்டுக் கொள்ளவும். அடுத்து மஞ்சள் திரி போட்டு விளக்கேற்றவும். பின்னர் பிள்ளையார் இடத்தில் வரன் சீக்கிரம் அமைந்தால் திருமணத்தை மண்டபத்தில் நடத்தாமல் எதாவது பெரிய கோயிலில் நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 5 வாரத்திற்கு ஞாயிறு அல்லது புதன் அன்று செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் திருமண யோகம் கூடி வரும். விரும்புபவர்கள் திருமண வரவேற்பை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம்.