உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம்.

நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை நாம் மிகவும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அதேபோல் வீட்டின் நான்கு முலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலைக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த வகையில் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சில விஷயங்களை தொடரந்து செய்து வந்தோம் என்றால் வற்றாத பண மழை பொழியத் தொடங்கி விடும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன் வீட்டை நன்கு துடைத்துக் கொள்ளவும். பின்னர் வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு பொருளை வைத்து வழிபட்டு வர வேண்டும்.

அந்த பொருள் மஞ்சள் மக்காசோளம் தான். இந்த மக்காசோளம் ஓட்டை இல்லாமல், பூச்சி அரிக்காமல் இருக்க வேண்டும்.

நல்ல மஞ்சள் மக்காசோளம் ஒரு கைபிடி அளவு எடுத்து ஒரு மஞ்சள் காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டிக் கொள்ளவும். பின்னர் அதை தென்கிழக்கு மூலையில் இருக்கும் படி செய்து உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு பணக் கஷ்டம் நீங்கி, செல்வ செழிப்போட வாழ வேண்டுமென்று நினைத்து வழிபடவும்.

பின்னர் பூஜை அறையில் கடவுள் படங்கள் முன் விளக்கேற்றி வைத்து கற்பூர ஆராதனை காட்டவும். இந்த கற்பூர ஆராதனையை தென்கிழக்கு மூலையில் வைத்துள்ள மஞ்சள் சோள மூட்டைக்கும் காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண மழை கொட்ட தொடங்கும்.
இந்த மஞ்சள் சோள மூட்டையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவசியம் மாற்ற வேண்டும்.
அப்படி செய்யும் பொழுது ஏற்கனவே மூட்டையில் உள்ள பழைய மக்காசோளத்தை காகம், குருவிக்கு உணவாக கொடுத்து விட்டு மீண்டும் புதிதாக மக்காசோளத்தை மஞ்சள் துணியில் போட்டு மூட்டை கட்டி தென்கிழக்கு மூலையில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பண மழை கொட்ட தொடங்கும்.