திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் 01:

திங்கட்கிழமை அன்று 3 தேங்காய் வாங்கி வந்து அதன் மேல் முழுவதுமாக மஞ்சள் தேய்த்து இரவு முழுக்க நன்கு காய விடவும்.

பின்பு கோணி தைக்கும் ஊசியில் சணல் கயிற்றைக் கோர்த்துக் கொள்ளவும். தேங்காய்க்கும் தேங்காய் நாறுக்கும் இடையே ஊசியை குத்தி கையிரோடு வெளியே எடுத்து அடுத்த 2 தேங்காய்களையும் அதேபோல் செய்து மலை போல் கோர்த்து விட்டு முடுச்சிப் போடவும்.

பின்பு உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று இந்த தேங்காய் மாலையை அவருக்கு சாத்தி விடுங்கள்.

அப்படி சாத்தும் பொழுது ஒரு பூ மாலையும் சேர்த்து சாத்த வேண்டும். மாலை கொடுக்கும் பொழுது திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கை கூட வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கவும்.

திருமணம் முடிந்தவுடன் மணமக்களோடு வந்து 9 தேங்காய் கோர்த்த மாலை சத்துகிறேன் என்றுவ வேண்டிக் கொள்ளவும்.

அதேபோல் திருமணம் முடிந்தவுடன் 9 தேங்காய்களை இதே போல் கோர்த்து மாலையாக அணிவிக்கவும்.

திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் 02:

ஒரு மிகச் சிறிய பித்தளை செம்பு அல்லது காப்பர் செம்பு புதிதாக வாங்கி கொள்ளவும்.

தண்ணீரில் சிறிது பன்னீர் ஊற்றி சிறிது மஞ்சள்தூள், பச்சை கற்பூரம் போட்டு இந்த நீரில் அந்த செம்பைக் கழுவவும்.

பின்பு சற்றுக் காய்ந்த பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். பின் சிறிய அளவு மஞ்சள் துணி புதிதாக வாங்கி அதன் நடுவில் சிறிய ஓட்டை போட்டு செம்பின் மீது வைத்து மஞ்சள் ரப்பர் பாண்ட் போட்டு விடவும்.

பார்ப்பதற்கு உண்டியல் போல் காட்சி தரும். இது தான் உங்கள் குலதெய்வ உண்டியல்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று இதை ஆரம்பித்து தினமும் காலை குளித்து விட்டு உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு 1 ரூபாய் நாணயத்தை போடவும்.

தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் 90 நாட்கள் போடவும். அதற்குள் நிச்சயம் வரன் அமையும். சாதாரணமாக இருப்பதால் லேசாக நினைக்க வேண்டும். நிச்சயம் பலன் கொடுக்கும்.