ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!

Photo of author

By Rupa

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!

கருவளையம் ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது.தூக்கமின்மை,அதிக நேரம் போன் உபயோகிப்பது,மாறுப்பட்ட உணவு பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.இந்த கருவளையங்களை சில வீட்டு வைத்தியம் மூலம் அடியோடாக நீக்கலாம்.

கற்றாழை:

கற்றாழை ,இதை உபயோகிப்பதால் சருமம் வறட்சி நீங்கும்.சர்ம செல்களுக்கு உட்டச்சத்துகளை அளித்து புத்துணர்ச்சி தரும்.அதையடுத்து சர்மங்களை இறுக்கமடைய செய்யும்.கற்றாழையை பறித்துக்கொண்டு வந்து அதை கழுவிவிட்டு கண்ணிற்கு அடியில் பொறுமையா மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்ணை கழுவி எடுக்க வேண்டும்.இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வந்தால் கண்ணின் கருவளையம் குறைந்து வரும்.

புதினா:

புதினா இழைகளிலுள்ள வைட்டமின் சி கண்ணின் கருவளையத்தை குறைக்க பெருமளவு உதவுகிறது.சருமத்திற்கும் புத்துணர்ச்சியை தருகிறது.அதற்கு சிறிதளவு புதினா இழைகளை எடுத்து தண்ணீர் உற்றி அறைத்து சிறிதளவு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கண்ணிலுள்ள கருவளையத்தில் போட்டு 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.பிறகு கண்களை குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்வதன் மூலம் கருவளையம் குறையும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு உபயோகிப்பதால்  கருவளையம் சுற்றி காணப்படும் வீக்கம் குறையும்.உருளைகிழங்கை ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு தோல் சீவி கொள்ள வேண்டும்.அந்த உருளைகிழங்கை தோல்  சீவிய பிறகு துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் தூங்குமுன் கண்கள் மேல் வைத்து உறங்க வேண்டும்.காலை எழுந்தவுடன் கண்களை நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.இதை தினமும் பயன்படுத்துவதன் மூலம் கருவளையமால் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

கடைகளில் கிடைக்கும் கிரீம்களை உபயோகிக்காமல் வீட்டில் கிடைப்பதை உபயோகித்து பழகுங்கள்.அது சருமத்திற்கு மிகவும் நல்லது.