வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!
பணம் இல்லாத மனிதன் பிணம்… என்கிறது பழமொழி. எந்த காலத்திலும் நம்மிடம் வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள்.
இந்த பணத்தை சம்பாதிக்க தான் ஒவ்வொரு மனிதனும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கின்றான்.
அப்படி உழைக்கும் பணம் கையில் தங்காமல் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு கை நழுவி சென்று விடுகின்றது.
பணம் சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது தான் மிகவும் கடினமான ஒன்று. பண சேமிப்பில் தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் நிச்சயம் எதிர்காலத்தை நினைத்து வருந்த வேண்டிய அவசியம் இருக்காது.
பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டியவை…
நீங்கள் ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில் சிறிது சில்லறை நாணயங்கள் வைப்பதினால் தன வரவு அதிகரிக்கும்.
நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. ஒரு மஞ்சள் துணியில் சிறிது சில்லறை காசுகள், 1 பச்சை கற்பூரம், 1 ஏலக்காய் சேர்த்து மூட்டை கட்டி பணம் உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் மகா லட்சமி தயார் பணம் உள்ள இடத்திற்கு குடி வருவார். இதனால் பண விரையம், கடன் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரித்து செல்வந்தர்களாகும் யோகமும் உண்டாகும்.