பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

Divya

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

வருமானத்தை மீறி செலவு ஆகிறது என்பது தான் தற்பொழுது அனைவரின் புலம்பலாக இருக்கிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை சேமிக்க முடியவில்லை. செலவு தான் அதிகம் ஆகிறது என்று நினைத்து வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பணம் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்:-

இந்த எளிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

ஒரு வெள்ளை காட்டன் துணியில் சிறிது வெங்காரம் வைத்து 2 தேக்கரண்டி கிராம்பு வைத்து முடுச்சாக கட்டி பணப் பெட்டியில் போட்டு வைக்கவும். 48 நாட்களுக்கு ஒருமுறை இதை மாற்றி பழையதைக் கால் படாத இடத்தில் போடவும். முடிந்தவர்கள், இதை மாற்றும் நாளன்று விநாயகர் கோயிலுக்குச் சென்று ஓர் சிதறு தேங்காய் போட்டால் இன்னும் நல்லது.

இந்த இரண்டு முறை செய்வதற்குள் வரவுக்குள் பண விரையம் அடங்கி பணம் தங்க ஆரம்பிக்கும். இதே போன்று மற்றொரு முடிச்சு செய்து ஹேண்ட் போக்கிலும் வைத்துக் கொள்ளலாம். அதையும் 48 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இந்த பரிகாரம் பணம் விரையம் ஆகாமல் பணம் தங்க வழிவகுக்கும்.