உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

Divya

உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!

நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்…

நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்று தானியங்களையும் ஒரு டப்பாவில் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தானியங்களை உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பறவைகளுக்கு உணவாக ஒரு கைப்பிடி அளவு வைக்கவும்.

அதுமட்டும் இன்றி இந்த மூன்று நவதானியங்களையும் சேர்த்து பிறருக்கு தானம் செய்தால் வாழ்வில் அதிக நல்லது நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண முடியும்.

அதுமட்டும் இன்றி வீட்டின் தென்கிழக்கு மூலையில் மாக்கச் சோள விதைகளை ஒரு மஞ்சள் துணியில் போட்டு மூட்டை கட்டி தொங்க விட்டாலும் பண வரவு அதிகரிக்கும்.

இந்த மூட்டையை 3 மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் மாற்றிவிட வேண்டும். இதை விடாமல் செய்து வந்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.