குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

நம் குலத்தை காக்க குலதெய்வத்தின் அருள் அவசியம் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குலதெய்வத்தை மறந்தாலோ, வழிபாட்டில் குறை வைத்தாலோ குலதெய்வம் நம் மீது கோபம் கொள்ளும்.

ஒருவேளை குலதெய்வம் கோபப்பட்டால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். அதேபோல் நம் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் கோபம் அதிகமாகும்.

குலதெய்வ கோபத்தில் இருந்து நீங்க வழி:-

குலதெய்வ கோபம் நீங்க அவரே நினைத்தால் மட்டுமே நீக்க முடியும். அதனால் அவருக்குப் பிடித்தது போல நாம் குலதெய்வத்திற்கு படையல் போட்டு தவற்றை உணர்ந்து கண்ணீர் விட்டு மன்றாடி வணங்கினால் மட்டுமே குலதெய்வ கோபம் நீங்கும்.

குலதெய்வ கோயிலுக்கு வேண்டியவற்றை பார்த்து செய்தல், மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுதல் போன்றவற்றை செய்து வந்தாலும் குலதெய்வத்தின் கோபம் குறைந்து மனம் குளிரும்.