பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

Photo of author

By Divya

பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

Divya

சமீப காலமாக பெண்களிடையே சிறுநீர் பாதை தொற்று அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதனால் தான் இந்த பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க முடியமால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் காலங்கள் மற்றும் உடலுறவிற்கு பிறகு இந்த சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை பல பெண்கள் சந்திக்கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீர் பாதை தொற்று குழந்தைகள்,பெரியவர்கள்,ஆண்,பெண் என்று யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.இருப்பினும் பெண்களே இந்த பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.

சிறுநீர் பாதை தொற்றுக்கான அறிகுறிகள்:

1)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உண்டாதல்
2)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல்
3)சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல்
4)யோனி பகுதியில் புண்கள் உருவாதல்
5)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்

சிறுநீர் பாதை தொற்றுக்கான காரணங்கள்:

1)போதிய தண்ணீர் பருகாமை
2)சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல்
3)சுகாதாரமற்ற பாலியல் உறவு
4)சிறுநீர் கழித்த பின்னர் யோனியை சுத்தம் செய்யத் தவறுதல்

பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை தொற்றை அனுபவிக்கின்றனர்.மலக்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதைக்குள் நுழைந்து நோய் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்றை தடுக்கும் வழிகள்:

*தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அடக்கி வைக்காமல் உடனடியாக அவற்றை வெளியேற்றிவிடுங்கள்.

*ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்த பின்னரும் யோனி பகுதியை சுத்தம் செய்யுங்கள்.உடலுறவிற்கு பிறகு யோனியை சுத்தம் செய்ய வேண்டும்.

*பிறப்புறுப்பு பகுதியில் கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.