பெண்களே பங்க்சன் டைமில் மாதவிடாய் தள்ளி போகணுமா? அப்போ இந்த நேச்சுரல் டிப்ஸ் தங்களுக்கு உதவும்!!

Photo of author

By Divya

பெண்களே பங்க்சன் டைமில் மாதவிடாய் தள்ளி போகணுமா? அப்போ இந்த நேச்சுரல் டிப்ஸ் தங்களுக்கு உதவும்!!

பருவமடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி வருவது வழக்கமான ஒன்று தான்.சிலருக்கு இச்சுழற்சி 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.சிலருக்கு முன்கூட்டியே மாதவிடாய் வந்து விடும்.சிலருக்கு மாதவிடாய் தள்ளி போகும்.

நாள்பட்ட மாதவிடாயை சீராக்க இயற்கை முறையில் தீர்வு உள்ளது போல் மாதவிடாயை தள்ளி போக வைக்கவும் தீர்வு இருக்கிறது.கோயிலுக்கு செல்லுதல் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நாட்கள் மாதவிடாய் வரக் கூடிய நாட்களாக இருக்கிறது என்று அறிந்தால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மாதவிடாயை தள்ளி போக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டும்.

மாதவிடாயை தள்ளி போக வைக்க மருந்து மாத்திரைகள் இருந்தாலும்அதை உட்கொள்ளாமல் இயற்கை வழிகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

கடைகளில் கிடைக்க கூடிய ஜெலட்டின் பவுடரை நீரில் கரைத்து குடித்தால் மாதவிடாய் தள்ளி போகும்.இதை ஒரு வாரத்திற்கு முன்பாகவே செய்ய வேண்டும்.

அதேபோல் ஏதேனும் ஒரு பயறு வகையை அரைத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.

கடுகை வறுத்து பொடி செய்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் தள்ளி போகும்.அதேபோல் கொத்தமல்லி விதையை வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.

ஒரு கிளாஸ் நீரில் 1/2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் மாதவிடாய் சில தினங்களுக்கு தள்ளி போகும்.ஒரு கிளாஸ் நீரில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை கலந்து குடித்தால் தாமதமான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.மாதவிடாயை தள்ளி போக வைக்க சில உடற்பயிற்சிகள் செய்து வரலாம்.இவை அனைத்தையும் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் செய்தால் நிச்சயம் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்.