வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)குப்பைமேனி இலை
2)மிளகு
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு குப்பைமேனி இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மிளகுத் தூளை கொதிக்கும் குப்பைமேனி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் தோல் அரிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)குப்பைமேனி இலை
2)குப்பைமேனி வேர்
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
குப்பைமேனி இலை மற்றும் குப்பைமேனி வேரை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த குப்பைமேனி சாறை அதில் ஊற்றி பருகி வர தோல் அரிப்பு,தோல் எரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.