Breaking News, Health Tips

படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!

Photo of author

By Divya

உங்களுக்கு அடிக்கடி சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதனை அலட்சியமாக கருதாமல் உரிய தீர்வை காணுங்கள்.

மூச்சு வாங்க காரணங்கள்:-

1.நுரையீரல் பிரச்சனை
2.தீவிர சளி தொந்தரவு
3.சைனஸ் பிரச்சனை
4.சுவாச நோய்த் தொற்று
5.ஆஸ்துமா
6.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு
7.உடல் பருமன்
8.காற்று மாசுபாடு
9.ஒவ்வாமை
10.இரும்புச் சத்து குறைபாடு

மூச்சு வாங்குதல் பிரச்சனையை ஓமத்தை கொண்டு குணப்படுத்தலாம்.இந்த ஓமத்தில் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,தயமின்,நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.மூச்சு வாங்குதல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை சந்தித்து வருபவர்கள் ஓமத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)மோர் – ஒரு கிளாஸ்
3)கடுக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
4)இந்துப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு ஓமத்தை நன்றாக ஆறவிட வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் ஓமத்தை போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

அதன் பிறகு சிறிதளவு இந்துப்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி மோரில் கலந்து பருக வேண்டும்.இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்த மோரை தொடர்ந்து பருகி வந்தால் மூச்சு வாங்குதல் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)சுக்கு – ஒரு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஓமத்தை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் கொட்டி பொடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பொடியை கிண்ணத்தில் கொட்டி ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால் மூச்சு வாங்குதல் பிரச்சனை குணமாகும்.

அதேபோல் ஓமத்தை பொடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத சர்க்கரை நோய் குணமாகும்.பசியின்மை பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாருகினால் நன்றாக பசியெடுக்கும்.

ஓமம்,சுக்கு,மிளகு போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போல் பருகி வந்தால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!