நம்மை புத்துணர்வுடன் வைக்க உதவும் சூடான பானங்களில் ஒன்றுதான் தேநீர்.தேயிலை தூள்,பால்,சர்க்கரையை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.தினமும் காலை வேளையில் ஒரு கிளாஸ் சூடான தேநீர் அருந்திவிட்டு அந்நாளை தொடங்குபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
சிலருக்கு ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் தேநீராவது குடித்துவிட வேண்டுமென்ற மனநிலை இருக்கிறது.உலகிலேயே நம் இந்தியவர்கள்தான் தேயிலை தேநீரை விரும்புகின்றனர்.சிலர் தேநீரின் சுவைக்கு அடிமையாக உள்ளனர்.
ஒன்று அல்லது இரண்டு தேநீர் குடிப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இரண்டு தேநீருக்கு மேல் குடிக்கும் பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதிகளவு தேநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
1)உடலில் பித்தம் அதிகரிக்க வழிவகுத்துவிடும்.அதிகளவு தேநீர் குடித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.
2)அடிக்கடி தேநீர் குடித்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
3)அளவிற்கு அதிகமாக டீ குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.அடிக்கடி டீ குடித்தால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
4)சர்க்கரை சேர்த்த தேநீர் நம் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.
5)வெறும் வயிற்றில் தேநீர் குடித்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
6)வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.தேயிலை தேநீர் குடித்தால் இளநரை பிரச்சனை ஏற்படும்.
7)அளவிற்கு அதிகமாக டீ குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.அதிக டீ குடித்தால் வயிற்று வலி பாதிப்பு ஏற்படும்.