காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

Photo of author

By Amutha

காலையில் டீ காபி குடிப்பவர்களா நீங்கள்?? அதற்கு பதில் இதகுடிச்சு பாருங்க! மூட்டு வலி உடல் சோர்வு அஜீரணக் கோளாறு அனைத்தும் பறந்து விடும்! 

காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  உடல் சோர்வு, மூட்டு வலி மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு, வாயு தொல்லை, இவை அனைத்தும் சரியாகும். உடலுக்கு நல்லதோர் தெம்பை கொடுக்கும்.

எந்தவித நோயும் நம்மை அண்டாது. சாதாரண டீ காபியை விட சுவை அடிச்சு தூள் பறக்கும்.

தேவையான பொருட்கள்:

1. சுக்கு             – 20 கிராம்

2. அதிமதுரம்.  – 5 கிராம்

3. சித்தரத்தை  – 5 கிராம்

இவை மூன்றையும் உரலில் வைத்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.

4. கொத்தமல்லி விதைகள் – 100 கி

5. வால் மிளகு – கால் டீஸ்பூன்

6. சீரகம் –  1 டீஸ்பூன்

7. மிளகு – 2 டேபிள்ஸ்பூன்

அடுப்பில் வாணலியை வைத்து கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வறுக்கவும். பின்னர் அதில் வால்மிளகு, சீரகம், மிளகு, சேர்த்து வறுக்கவும். இறுதியாக தட்டி வைத்த சுக்கு அதிமதுரம் சித்தரத்தை சேர்த்து ஒருமுறை வறுத்து அடுப்பை ஆஃப் செய்யவும்.

வறுத்து வைத்ததை நன்றாக ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசான பவுடராக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அரை ஸ்பூன் இந்த பவுடரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து வடிகட்டி காலை வேளையில் குடித்து பாருங்க.

நன்றாக சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும். உடலில் உள்ள சோர்வெல்லாம் பறந்து விடும்.