தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

Photo of author

By Divya

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

Divya

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும்.

குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை கட்டுப்படுத்த முடியாது.இதில் எச்சில் வடிவதை அவர்களால் தடுக்க முடியாது.

ஆனால் நன்கு வளர்ந்த ஒருவருக்கு தூக்கத்தில் தானாக எச்சில் வடிகிறது என்றால் அது பெருமூளை வாத அறிகுறியாக இருக்கலாம்.நீங்கள் ஒருபக்கமாக சாய்ந்து படுக்கும் பொழுது வாயில் இருந்து தானாக எச்சில் வடியும்.

வாயில் இருந்து எச்சில் வடிய காரணம்?

நாம் தூங்கும் பொழுது வாய் ஓரத்தில் உள்ள தசைகள் தளர்வடையும.இதனால் வாயில் அதிக உமிழ்நீர் உற்பத்தியாகி வெளியேறுகிறது.

உங்களுக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் தூக்கத்தில் எச்சில் வடியும்.பகல் நேரத்தில் அதிக உடல் சோர்வு,சத்தமாக குறட்டைவிட்டு உறங்குபவர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும்.அதேபோல் இரைப்பை அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடியும்.

அதேபோல் மூளை பக்கவாதம்,பெருமூளை வாதம்,மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடுதல் போன்ற காரணங்களால் வாயில் எச்சில் வடியும்.ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் தூங்கும் பொழுது எச்சில் வடியும்.

தூக்கத்தில் வாயில் எச்சில் வடிவதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மல்லாந்து படுப்பதை தவிர்த்தால் எச்சில் வடியாமல் இருக்கும்.உறக்கத்தின் போது வாயில் சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.தலையணையை உயரமாக வைத்து படுக்க வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் தூக்கத்தில் வாயில் எச்சில் வடிவது கட்டுப்படும்.