ஆண்டுதோறும் கிடைக்க கூடிய மலிவு விலை பழங்களில் ஒன்று வாழைப்பழம்.இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூவன்,கற்பூரவல்லி வாழை,மொந்தன்,செவ்வாழை,பச்சை வாழை என்று இதில் ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றது.
ஒவ்வொரு ரகமும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டியது அவசியம்.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.இரத்த அழுத்த பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்தும்.
மன அழுத்தம்,உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வாக இருக்கின்றது.வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு இருப்பவர்கள்,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழம் உட்கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின் சி,பி6,ஏ
பொட்டாசியம்
மெக்னீசியம்
தாமிரம்
நார்ச்சத்து
கலோரிகள்
புரதம்
கொழுப்பு
கார்போஹைட்ரேட்டுகள்
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இதய ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.
என்னதான் இது ஊட்டச்சத்து மிக்க கனியாக இருந்தாலும் இதை சாப்பிட்ட பிறகு நாம் சில விஷயங்களை செய்யக் கூடாது.குறிப்பாக வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.இப்பழத்தை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் வயிறுக் கோளாறு,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.