வெள்ளை அரிசி உணவை காட்டிலும் சப்பாத்தி ஒரு சிறந்த ஆரோக்கியம் நிறைந்த உணவாக திகழ்கிறது.கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த சப்பாத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவியாக இருக்குமென்று பலரும் நினைக்கின்றனர்.
டயட் இருப்பவர்கள் பின்பற்றும் உணவுப் பட்டியலில் சப்பாத்தி உணவுகள் இடம் பெற்றிருக்கிறது.வட இந்திய மக்களின் பிரதான உணவாக சப்பாத்தி இருக்கிறது.தென் இந்தியாவில் அரிசி உணவு பிரதான உணவு போல் வட இந்தியாவில் கோதுமை உணவுகள் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த சப்பாத்தியை உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தியை ஆரோக்கிய உணவாக கருதுகின்றனர்.சப்பாத்தியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.
இந்த சப்பாத்தியை எந்த வயதினரும் சாப்பிடலாம்.சப்பாத்தி உணவுகள் நன்மைகள் பல கொண்டிருந்தாலும் அவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் மோசமான பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக சப்பாத்தி சாப்பிட்டால் பல்வேறு பக்விளைவுகள் உண்டாகிவிடும்.
சப்பாத்தி உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.இருப்பினும் இந்த சப்பாத்தி உணவுகளை இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதனால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரவு நேரத்தில் சப்பாத்தி உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.சப்பாத்தியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.இரவு நேரத்தில் அதிகாமாக சப்பாத்தி சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.சப்பாத்தி சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
காலை நேரத்தில் சப்பாத்தி அளவாக சாப்பிடலாம்.ஆனால் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட்டால் இதுபோன்ற பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.எனவே இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதை இனி தவிர்ப்பது தான் நல்லது.இரவிற்கு பதில் மாலை நேரத்தில் சப்பாத்தி உணவுகளை சாப்பிடலாம்.