அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

Photo of author

By Divya

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

Divya

இன்று அனைவருக்கும் பேவரைட் உணவாக இருப்பது பரோட்டா தான்.இந்த பரோட்டாவை குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.தற்பொழுது எங்கு பார்த்தாலும் பரோட்டா மையமாக இருக்கிறது.

வீச்சு பரோட்டா,முட்டை பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,நெய் பரோட்டா என்று பரோட்டாவில் பல வகைகள் இருக்கின்றது.பரோட்டா சுவையான உணவு என்றாலும் அவற்றை உட்கொள்வதால் உடலுக்கு எந்த ஆரோக்கியமும் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மைதாவில் செய்யப்படும் பரோட்டா வயிறு ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.மைதாவில் மிகவும் குறைவான அளவே நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.மைதா பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் கணைய புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

ருசியான உணவுகள் எப்பொழுதும் நமக்கு ஆபத்தானதாகவே இருக்கும்.பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.

பரோட்டா அதிகாமாக சாப்பிட்டால் என்னென்னெ பாதிப்புகள் ஏற்படும்?

1)வாயுத் தொல்லை
2)மலச்சிக்கல்
3)செரிமானப் பிரச்சனை
4)நெஞ்சு வலி
5)மாரடைப்பு
6)உடல் பருமன்
7)கெட்ட கொழுப்பு அதிகரிப்பு
8)வயிறு உப்பசம்
9)வயிறு எரிச்சல்
10)அசிடிட்டு
11)இரத்த அழுத்தம் அதிகரிப்பு

அதிகமாக மைதா பரோட்டா சாப்பிடுவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்கிறது.மைதா மாவில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரித்து உடலை பெருக்கச் செய்துவிடும்.

மைதா பரோட்டாவை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே அடிக்கடி மைதா உணவுகளை உட்கொள்ளாமல் ஆசைக்காக எப்பொழுதாவது உட்கொள்ளலாம்.