முந்தைய காலத்தில் உணவுதான் உடலை காக்கும் மருந்தாக இருந்தது.உடலில் எந்த நோய்களும் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் உணவுகளை மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.நாம் காலம் காலமாக பின்பற்றி வந்த உணவுப் பழக்கம் தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது.
கூழ்,கஞ்சி என்று இருந்த நாம் தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட்புட் போன்ற வெளிநாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.வெளிநாட்டவர்களை விட இந்தியர்களுக்கு தான் ஜங்க் புட் மீது அதிக மோகம் இருக்கிறது.தற்பொழுது ஆரோக்கியத்தை பாழாக்கும் உணவுகளை தேடி தேடி உட்கொண்டு வரும் நமக்கு பின்னாளில் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறது.
உணவு எனது வாய் ருசிக்காக மட்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.முதலில் நமது ஆரோகிதத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பேணிப் பாதுகாக்கும் உணவுகளை மட்டுமே தயாரித்து சாப்பிட வேண்டும்.ஆனால் பெருமபாலானோர் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியத்தில் கோட்டை விடுகின்றனர்.
இப்படி சுவைக்காக மட்டும் உட்கொள்ளும் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் பல உள்ளன.அவற்றில் சில வகை உணவுகள் இங்கு தரப்பட்டுள்ளது.இந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் கூடிய விரைவில் நோயாளிகளாகிவிடுவீர்கள்.அதேபோல் நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில வகை உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையாக இருக்கின்றது.
அதிகம் உட்கொள்ளக் கூடாத உணவுகள்:
1)உருளைக்கிழங்கு
இதில் தயாரிக்கப்படும் சிப்ஸ்,வறுவல் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.உருளைக்கிழங்கு உணவுகளை அதிகமாக உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
2)வெங்காயம்
உணவில் அதிக வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால்,தொண்டை எரிச்சல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
3)வாழைப்பழம்
இந்த பழத்தில் இருக்கின்ற சர்க்கரை சத்து இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
4)உலர் பழங்கள்
இதில் நிறைந்திருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.உலர் பழங்கள் நல்லது என்றாலும் அதை குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
5)தக்காளி
இந்த பழத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல்,உடல் சூடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.