உடலுறவில் சேர்ந்த உடனே விந்து வெளியேறிவிடுகிறதா? நீடித்த சுகத்தை அனுபவிக்க இந்த கீரை சாப்பிடுங்க!!

Photo of author

By Divya

உடலுறவில் சேர்ந்த உடனே விந்து வெளியேறிவிடுகிறதா? நீடித்த சுகத்தை அனுபவிக்க இந்த கீரை சாப்பிடுங்க!!

Divya

பொதுவாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கிறது.வாரம் குறைந்தது இருமுறையாவது கீரையை உட்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.1000,2000 செலவு செய்து அசைவ உணவுகள் சாப்பிடுவதைவிட 10,20 செலவு செய்து கீரை கட்டு வாங்கி சாப்பிட்டு வந்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கீரையை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.காரணம் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவு நிறைந்திருப்பது தான்.நாம் முருங்கை கீரை,மணத்தக்காளி,பாலக் கீரை போன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம்.ஆனால் அரைகீரையின் அருமை தெரிந்தால் இனி எங்கு கிடைத்தாலும் வாங்கிவிடுவீர்.

அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.உடலுறவில் நீடித்த இன்பத்தை அனுபவிக்க அரைக்கீரையை சாப்பிடலாம்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் இருந்து மீண்டுவிடலாம்.உடல் சோர்வு,கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலுறவில் சிலருக்கு சேர்ந்த உடன் விந்து வெளியேறிவிடும்.இதனால் முழுமையாக உடலுறவை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.இந்த பிரச்சனை இருக்கும் தம்பதியர் அரைக்கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.உடல் மெலிந்து இருப்பவர்கள் அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் வலிமை கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.மூட்டுவலி,வாயுத் தொல்லை,கை கால் வலி,வயிற்று பொருமல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் அரைக்கீரை,வெள்ளைப்பூண்டு பல்,பெருங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து சமைத்து உட்கொண்டால் பலன் கிடைக்கும்.சளி பிரச்சனை இருப்பவர்கள் அரைக்கீரை,மிளகு,பூண்டு,மஞ்சள் போன்றவற்றை கொண்டு சூப் செய்து பருகி வந்தால் சளி கரைந்து வெளியேறிவிடும்.