இன்று பலர் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்க வழக்கம் தான் என்பது பலர் முன் வைக்கும் கருத்தாக இருக்கிறது.
மோசமான உணவுகளால் வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடல் அலர்ஜி,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.
சிலருக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிறு வலி,வயிறு பிடிப்பு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.மோசமான உணவுகள்,பதப்படுத்திய உணவுகள்,சரியான முறையில் வேகவைக்கப்படாத உணவுகள்,மைதா உணவுகள் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகளை உருவாக்கிவிடும்.
மேலும் பொருத்தம் இல்லாத உணவுகளை ஒன்றாக உட்கொண்டாலும் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.அதாவது மீன் தயிரை ஒன்றாக சாப்பிட்டால் அவை உடலில் எதிர்வினை ஆற்றும் என்று சொல்வார்கள்.இதுபோன்ற உணவுகளை உட்கொண்டால் வயிறு வலி,வயிறு வீக்கம்,தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் குணமாகும்.
சிலவகை உணவுகள் மோசமான செரிமானத்திற்கு வழிவகுக்கும்.வேகமாக சாப்பிடுதல்,எளிதில் செரிமானமாகாத உணவுகளால் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும்.சிலருக்கு குடல் சார்ந்த பாதிப்புகள் இருந்தால் உணவு உட்கொண்ட உடனே வயிறு வலி,வயிறு பிடிப்பு போன்றவை உண்டாகும்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வரலாம்.
1)சாப்பிடுவதற்கு முன்னர் சீர்கத் தேநீர் செய்து பருகலாம்.ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடித்து குடித்து வந்தால் வயிறு ஆரோக்கியம் மேம்படும்.
2)தினமும் காலையில் ஒரு கிளாஸ் இஞ்சி பானம் பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை,வயிறு வலி போன்றவை குணமாகும்.இஞ்சியை இடித்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் பருகி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.
3)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரை பருகி வந்தால் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் வயிறு ஆரோக்கியம் மேம்படும்.