வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்!

வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்!

ஒரு சிலருக்கு வெயில் என்றால் ஆகவே ஆகாது.எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் ஒருவித மயக்க உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு

அது மட்டுமின்றி உடல் சோர்வு,மனக் கவலை,சிலருக்கு உணவை தவிர்ப்பதினால் மயக்க உணர்வு ஏற்படுகிறது.இதுபோன்ற மயக்க உணர்வு பாதிப்பை தடுப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

முதலில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.தினமும் மூன்று முதல் ஐந்து லிட்டர் நீர் அருந்துவது அவசியம்.அதேபோல் மயக்க உணர்வு ஏற்பட்டால் சில மூலிகை தேநீர் செய்து குடிப்பது நல்லது.

மஞ்சள் தேநீர்

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள்
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடித்தால் மயக்க உணர்வு நீங்கும்.

கருப்பு தேநீர்

தேவையான பொருட்கள்:-

1)தேயிலை தூள்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டவும்.பின்னர் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து குடித்தால் மயக்க உணர்வு நீங்கும்.

எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
3)உப்பு

செய்முறை:-

ஒரு கிளாஸ் நீரில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து சிட்டிகை அளவு உப்பு சேர்த்து குடித்தால் மயக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.