ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

Photo of author

By Divya

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

கொள்ளு அரைக் கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும்.

திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது கோதுமை மாவில் சிறிது கறுப்பு எள் கலந்து மாவு பிசைந்து 2 பூரி செய்து அதை சிறு துண்டுகளாக்கி ஒரு கிண்ணத்தில் காகத்திற்கு வைத்து விடவும்.

வாரத்தில் 2 நாட்கள் பசுவிற்கு வாழைப்பழம் வாங்கி உணவாக சாப்பிடக் கொடுக்கவும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த பரிகாரம் செய்யும் போது நீங்கள் சாப்பிட மீதி உணவைக் காகத்திற்கு வைக்கக் கூடாது.

ஒரு மாதம் செய்தவுடனேயே நல்ல மாற்றத்தை நிச்சயாமாக உணர முடியும்.