சாப்பிட உடனே புளித்த ஏப்பம் வருகிறதா? இதை கண்ட்ரோல் செய்ய உதவும் பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

Photo of author

By Divya

சாப்பிட உடனே புளித்த ஏப்பம் வருகிறதா? இதை கண்ட்ரோல் செய்ய உதவும் பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

உங்களில் சிலர் புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதியடைந்து வருவீர்கள்.இவை வயிற்றில் சுரக்கும் அமிலகங்களால் ஏற்படுகிறது.இந்த புளித்த ஏப்பத்தால் சாப்பிட உணவு திரும்பவும் வாயில் வழியாக வெளியேறும் ஒரு உணர்வு ஏற்படும்.

இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு உணவை நிம்மதியாக சாப்பிட முடியாமல் போகும்.சிலருக்கு புளித்த ஏப்பத்தால் வாந்தி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

புளித்த ஏப்பம் யாருக்கெல்லாம் ஏற்படும்?

உணவு சாப்பிட்ட உடனே படுத்தல்,உறங்குதல் என்று இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் ஏற்படும்.

காரமான உணவு,கொழுப்பு,எண்ணெய் நிறைந்த உணவு,தக்காளி,பூண்டு,வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் புளித்த ஏப்ப பிரச்சனை ஏற்படும்.

அதிகளவு டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் ஏற்படும்.

மது மற்றும் புகை பழக்கம் இருந்தால் புளித்த ஏப்பம் உண்டாகும்.காலை மற்றும் இரவு தாமதமாக உணவு எடுத்துக் கொண்டால் புளித்த ஏப்பம் ஏற்படும்.

புளித்த ஏப்பம் அறிகுறிகள்:-

1)அடிவயிற்றில் எரிச்சல் உணர்வு

2)நெஞ்சு பகுதியில் எரிச்சல்

3)வயிற்றில் சுரக்கும் திரவம் மீண்டும் வாய்க்கு வருதல்

4)வாந்தி

புளித்த ஏப்ப பிரச்சனைக்கு எளிய தீர்வுகள்:

*சோம்பு
*ஓமம்

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் நீர் ஊற்றி 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.

*சமையல் சோடா
*ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/4 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் 1/2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலக்கி குடித்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.

*பெருங்காயம்
*தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கி குடித்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.