நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பொதுவான பாதிப்பு தலைவலி.ஆனால் இவை அடிக்கடி ஏற்பட்டால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.மன அழுததம்,டென்சன்,உணவு பழக்கம் மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக தலைவலி உண்டாகிறது.இந்த தலைவலியை குறைக்க சிலர் அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்கள்.இது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும்.
எனவே தலைவலி வந்தால் இயற்கையான தைலம் செய்து பயன்படுத்தினால் மீண்டும் தலைவலி ஏற்படாமல் இருக்கும்.
தலைவலியை குணமாக்கும் வீட்டுமுறை தைலம்:
தேவையான பொருட்கள்:-
1)கற்பூரம் – இரண்டு
2)இலவங்க எண்ணெய் – ஐந்து தேக்கரண்டி
3)எலுமிச்சை தோல் – ஒன்று
4)ஓமவல்லி இலை – இரண்டு
செய்முறை விளக்கம்:-
*முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
*இரண்டு ஓமவல்லி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
*பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இலவங்க எண்ணெய் ஊற்றவும்.அதன் பிறகு அரைத்த எலுமிச்சை தோல் பொடி மற்றும் ஓமவல்லி இலை சாறை அதில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
*அதன் பிறகு இரண்டு கற்பூரத்தை தூளாக்கி அதில் போட்டு நன்றாக கலந்துவிடவும்.சேர்த்த கலவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
*பிறகு இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
*அதேபோல் தேங்காய் எண்ணெயில் சூடத்தை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு தலைக்கு தடவினால் தலைவலி குணமாகும்.துளசி மற்றும் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.
*ஒரு சிறிய அளவு சுக்கை நெருப்பில் வாட்டி தண்ணீரில் ஊறவைத்து தரையில் உரசி பேஸ்டாக்கி நெற்றியில் பூசினால் தலைவலி பாதிப்பு குணமாகும்.
*மூலிகை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.