எந்நேரமும் தலைவலி படுத்தி எடுக்கிறதா? காலையில் எழுந்ததும் இதை செய்யுங்கள்! உடனே பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

 எந்நேரமும் தலைவலி படுத்தி எடுக்கிறதா? காலையில் எழுந்ததும் இதை செய்யுங்கள்! உடனே பலன் கிடைக்கும்!

இன்றைய காலத்தில் எதை பற்றி சிந்தித்தாலும் தலைவலி தான் ஏற்படுகிறது.உடல் மற்றும் மனச்சோர்வு,தவறான உணவுப்பழக்க வழக்கங்களாலும் தலைவலி ஏற்படுகிறது.

அதேபோல் அதிக டென்ஷன் ஆனால் தாங்க முடியாதளவு தலைவலி ஏற்படும்.அடிக்கடி தலைவலி ஏற்படுவதால் மாத்திரை வாங்கி போடாமல் வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)புதினா இலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சியை தட்டி சேர்க்கவும்.

அதன் பின்னர் 2 அல்லது 3 புதினா இலைகளை நசுக்கி அதில் போட்டுக் கொள்ளவும்.ஒரு நிமிடம் கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும்.இந்த நீரை அருந்தி வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)வர கொத்தமல்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி விதை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

ஒரு நிமிடம் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் அரைத்த பொடியை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் நொடியில் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த நீரை காலை நேரத்தில் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.