ட்ராவலிங் டைமில் வாந்தி குமட்டல் ஏற்படுதா? இதை செய்தால் இனி இந்த பிரச்சனையை இருக்காது!!

Photo of author

By Rupa

நீண்ட தூர பயணம் செய்வதால் சிலருக்கு வாந்தி,குமட்டல்,தலைசுற்றல்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் பொழுது இதுபோன்ற அசௌகரிய சூழலை பலரும் சந்திக்கின்றனர்.இதனால் பயணம் செய்வதையே பலரும் தவிக்கின்றனர்.

சிலர் பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை மூக்கு அருகில் வைத்தபடி இருப்பர்.சிலர் பேசினால் வாந்தி வந்துவிடுமோ என்று வாயை திறக்காமல் இருப்பர்.இந்த அசௌகரிய சூழலை பெரியவர்கள் குழந்தைகள் என்று அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பயணத்தின் போது வாந்தி,குமட்டல் ஏற்படுவதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

1)புதினா எண்ணெய் வாந்தி குமட்டலை தடுக்க உதவும்.ஒரு கைகுட்டையில் புதினா எண்ணெய் சில சொட்டுகள் விட்டு மடித்து கொள்ளவும்.பயணத்தின் போது இந்த கைக்குட்டையை நாசிக்கு அருகில் வைத்துக் கொண்டால் வாந்தி குமட்டல் ஏற்படாமல் இருக்கும்.

2)அதேபோல் பழுத்த எலுமிச்சம் பழத்தை நாசிக்கு அருகில் வைத்துக் கொண்டால் குமட்டல்,வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

3)ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி துருவி ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.பயணத்தின் போது இஞ்சி துருவலை சாப்பிட்டால் வாந்தி,குமட்டல் ஏற்படாது.

4)நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால் ஏலக்காய் சிறிதளவு எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.பயணத்தின் போது வாந்தி,குமட்டல் வராமல் இருக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.பயணத்திற்கு முன்னர் அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.