உங்களுக்கு சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.சிலருக்கு சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மூச்சு வாங்கும்.
நடத்தல்,படி ஏறுதல்,பேசுதல் போன்ற அன்றாட வேலைகளை செய்யும் பொழுது இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறிவிடும்.
அதிக உடல் உழைப்பு,ஓடுதல்,தீவிர உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது மூச்சு வாங்குவது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் உடலை அலட்டாமல் செய்யும் வேலைகளுக்கு கூட மூச்சு வாங்குது என்றால் நீங்கள் நிச்சயம் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டியது முக்கியம்.
அசாதாரண மூச்சுத் திணறலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படலாம்.இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து குறைந்தால் அடிக்கடி மூச்சு வாங்குதல் பிரச்சனை ஏற்படும்.இந்த பாதிப்பு ஆண்,பெண் என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
உடலில் இரும்புச்சத்து குறைந்தால் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும்.அதேபோல் உடல் களைப்பு,மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.இது தவிர அடிக்கடி கை கால் மரத்து போதல் பிரச்சனை ஏற்படும்.
உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பது உறுதியானால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.அதேபோல் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் சிறு விஷயங்களுக்கு கூட மூச்சு வாங்குதல் ஏற்படும்.சுவாசப் பாதையில் அடைப்பு,ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் மாடி படி ஏறி இறங்கும் பொழுது மூச்சு வாங்கும்.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் துவர்ப்பு சுவை நிறைந்த வாழைக்காய்,வாழைப்பூ,வாழைத்தண்டு போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் பேரிச்சம் பழம்,மாதுளை,பீட்ரூட் ,முருங்கை,அத்திப்பழம்,தேன் நெல்லி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குணமாகும்.