குழந்தைக்கு மருந்து கொடுக்குறிங்களா? அப்போ பெற்றோர்கள் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!!

Photo of author

By Divya

இன்றைய காலத்தில் மருந்து மாத்திரை இன்றி குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயின்றி வாழ மருந்துகள் அவசியமான ஒன்றாகும்.

ஆனல் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் அதன் அடிப்படை புரிதலை பெற்றோர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் மற்றும் பக்கவிளைவுகள் உண்டாகிவிடும்.

சிலர் ஒருமுறை வாங்கிய மருந்தை பல வருடங்களுக்கு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறாகும்.சிலர் என்ன மருந்து என்று தெரியாமலையே குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.சிலர் காலாவதி தேதியை பார்க்காமல் மருந்தை பயன்படுத்துவார்கள்.

அதேபோல் சிலர் மருந்து லேபிளில் கொடுத்திருக்கும் அளவை விட அதிகமாக கொடுப்பார்கள்.குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற மருந்தா என்பதை பரிசோதிக்க வேண்டும்.அதேபோல் குழந்தைகளின் வியாதி அறிகுறிகள் குறிபிடப்பட்டிருக்கிறதா என்பதை பயன்படுத்துவதற்கு முன்னர் பரிசோதிக்க வேண்டும்.

மேலும் மருந்து டப்பாவில் உள்ள லேபிளை நீக்கவோ,வேறு மருந்துடன் ஒன்றாக கலக்கவோ கூடாது.மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்றால் அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.ஆறு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் நோய் அறிகுறிகளை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நோய் பாதிப்பிற்கு பரிந்துரைத்த மருந்தை வேறு நோய் பாதிப்புகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மருந்தை வேறொரு குழந்தைக்கு கொடுக்க கூடாது.அவ்வாறு கொடுத்தால் குழந்தைகளின் உடலில் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் சரியான இடைவெளி இருக்க வேண்டும்.அடிக்கடி மருந்து கொடுத்தாலோ அளவிற்கு அதிகமாக கொடுத்தாலோ குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் உண்டாகிவிடும்.எனவே குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் மருந்து பற்றிய புரிதல் அவசியம் இருக்க வேண்டும்.