நாம் அனைவரும் பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் பருப்புகளில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் மலிவு விலையில் கிடைக்கும் வேர்க்கடலையில் தான் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைத்து காணப்படுகிறது.
ஏழைகளின் புரத உணவாக திகழும் வேர்க்கடலையை அவித்து,வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.வேர்க்கடலையை அவித்து சாப்பிட்டு வந்தால் உடற்பயிற்சி செய்யாமலேயே கட்டுடலை பெறலாம்.
அவித்த வேர்க்கடலை சத்துக்கள்:
**நார்ச்சத்து
**புரதம்
**தாதுக்கள்
**வைட்டமின்கள்
**நல்ல கொழுப்பு
**கால்சியம்
**வைட்டமின் டி
தேவையான பொருட்கள்:-
*50 கிராம் பச்சை வேர்க்கடலை
*சிட்டிகை அளவு மிளகுத் தூள்
*சிட்டிகை அளவு தூள் உப்பு
*ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல்
செய்முறை விளக்கம்:-
1)முதலில் பச்சை வேர்க்கடலை 50 கிராம் அளவிற்கு உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
2)பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு வேர்க்கடலை பாத்திரத்தை அதில் வைத்து மிதமான தீயில் வேக வையுங்கள்.
3)பத்து நிமிடங்கள் வரை வேகவைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த வேக வைத்த வேர்க்கடலையை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.
4)அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று மிளகை உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு இடித்து வேகவைத்த வேர்க்கடலை மீது தூவிவிடுங்கள்.பிறகு சிட்டிகை அளவு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.
5)அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேங்காயை துருவி வேர்க்கடலையில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிடுங்கள்.வேர்க்கடலையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
இவ்வாறு வேகவைத்த வேர்க்கடலையை தினம் 50 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் தசை வளர்ச்சி அதிகரிக்கும்.தளர்ந்த தசை இறுக்கமடையும்.தங்கள் உடல் அமைப்பை மாற்ற விரும்புபவர்கள் வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிட்டு வரலாம்.அவித்த வேர்க்கடலை உடலில் புரதச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.