காய்கறிகளில் கத்தரிக்காய் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குண்டு கத்தரி,ஊதா கத்தரி,பச்சை கத்தரி,முள் கத்தரி,வரி கத்தரி என்று பல வகை கத்தரி ரகங்கள் இருக்கின்றது.இருக்கும் காய்களிலேயே கத்தரி அதிக ருசி கொண்ட காயாகும்.
இந்த காயில் குழம்பு,கிரேவி,சொல்லி,பிரட்டல்,வறுவல்,பொரியல்,தொக்கு என்று பல வெரைட்டிகள் செய்து சாப்பிடலாம்.கத்தரிக்காயின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும்.கத்தரிக்காய் சிறிய மற்றும் பெரிய வடிவில் வளர்கிறது.நம் ஊரில் பெரும்பாலும் ஊதா நிற கத்தரிக்காய் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரும்பு,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கத்தரிக்காயில் அடங்கியிருக்கிறது.கத்தரிக்காயை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் கத்தரிக்காயும் அடங்கும்.கத்தரிக்காய் உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்கள் வளர்வது கட்டுப்படும்.உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்க கத்தரிக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.
சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக கத்தரிக்காய் உட்கொள்ளலாம்.கத்தரிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஈ சருமத்திற்கு ஒருவித பளபளப்பை கொடுக்கிறது.சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக கத்தரிக்காய் சாப்பிடலாம்.
கத்தரிக்காய் உணவுகளை கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிட வேண்டும்.உடலில் பித்தம்,சூடு அதிகரிக்காமல் இருக்க கத்தரி உணவுகளை சாப்பிடலாம்.அம்மை நோய் வராமல் இருக்க கத்தரிக்காய் சாப்பிடலாம்.
வாயுத் தொல்லை அகல கத்தரிக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை காப்பதில் கத்தரி உணவுகள் சிறந்து விளங்குகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க கத்தரி உணவுகளை சாப்பிடலாம்.கத்தரி சாப்பிடுவதால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.கத்தரிக்காய் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.தசைகள் வலிமை பெற கத்தரிக்காய் சாப்பிடலாம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.மூளை ஆரோக்கியம் மேம்பட கத்தரிக்காய் சாப்பிடலாம்.