சமீப காலமாகவே கள்ள நோட்டு புழக்கமானது அதிகரித்திருப்பதாகவும் அவை ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை விட புது வகையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இது போன்ற கள்ள நோட்டுகள் இதற்கு முன்னதாகவே சந்தையில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் கள்ளநோட்டுகளை கண்காணித்து விழிப்புடன் கண்டுபிடிக்க வேண்டும் என வங்கிகள் சிபிஐ என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு செல்வது நன்மைக்கு மட்டுமல்லாத இதுபோன்ற தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் கள்ள நோட்டுகளை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்குவதால் அவற்றை கண்டறிவது தற்போது மிக கடினமான ஒன்றாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சந்தையில் புழக்கத்தில் இருக்கக்கூடிய கள்ள நோட்டு இருக்கும் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களுக்கும் இடையே ஒரே ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதாகவும் உங்களிடம் அல்லது நீங்கள் வரக்கூடிய வருடம் இருந்து 500 ரூபாய் தாள்களை பெற வேண்டும் என்றால் அதில் இந்த சின்ன பிழை இருக்கிறதா என்பதை சரி பார்த்து வாங்கும்படியும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அதன்படி, RESERVE BANK OF INDIA என அனைத்து 500 ரூபாய் தாள்களிலும் அச்சிடப்பட்டு இருப்பதில் கள்ள நோட்டுகளில் E என்ற எழுத்து இருக்கும் இடத்தில் அதற்கு மாறாக A என்ற எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் எனவே இதை வைத்து உங்களிடம் இருக்கக்கூடிய 500 ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகளா அல்லது போலியான நோட்டுகளா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். எனவே உடனடியாக உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றாலோ அல்லது கடைகளில் 500 ரூபாய் நோட்டுகள் வாங்குகிறீர்கள் என்றாலோ இதை சரிபார்த்தபின் வாங்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.