இரவு பல் துலக்கியும் காலையில் வாயை திறந்தால் பேட் ஸ்மெல் வருதா? ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

இரவு பல் துலக்கியும் காலையில் வாயை திறந்தால் பேட் ஸ்மெல் வருதா? ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

உங்களில் பலருக்கும் இருக்கின்ற பெரும் பிரச்சனை வாய் துர்நாற்றம்.பல் துலக்கினாலும் வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பலரின் புலம்பலாக இருக்கிறது.வாய் துர்நாற்றத்தால் அருகில் இருபவரிடன் பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறது என்று வேதனை படுபவர் அதிகம்.

வாய்துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

1)பல் சொத்தை
2)வாயில் உணவுத் துகள்கள் தேங்குதல்
3)பல் ஈறு பிரச்சனை

தங்கள் வாய் துர்நாற்றத்தை தங்களாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை.இரவு பல் துலக்கினாலும் காலையில் எழுந்ததும் வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது என்று வருத்தப்படுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

விட்டு வைத்தியம் 01:

1)எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி சிறிது சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வாயை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

வீட்டு வைத்தியம் 02:

1)கிராம்பு
2)தண்ணீர்

20 கிராம் கிராம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகுஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் 1/4 தேக்கரண்டி கிராம்புத் தூள் சேர்த்து கலந்து வாயை கொப்பளத்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

வீட்டு வைத்தியம் 03:

1)துளசி இலை
2)கொய்யா இலை

10 துளசி இலை மற்றும் இரண்டு கொய்யா இலையை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை பயன்படுத்தி பற்களை தேய்த்தால் வாய்துர்நாற்றம் அகலும்.

வீட்டு வைத்தியம் 04:

1)சோம்பு
2)தண்ணீர்

100 மில்லி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்சூட்டில் வாயை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.