உடலில் மிக முக்கிய உறுப்பாக திகழும் சிறுநீரகம்(கிட்னி) கழிவுகளை சிறுநீரக வெளியேற்றி வருகிறது.சிறுநீர் கழித்தால் மட்டுமே உடல் ஆரோக்கிய செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால் சிறுநீரில் அதிகளவு துர்நாற்றம் ஏற்பட்டால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.அதேபோல் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் தென்பட்டால் அதையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சலை அனுபவித்தல்,சூடான சிறுநீர் வெளியேறுதல்,நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்,சிறுநீரில் அதிக குமிழ்கள் தென்படுத்தல் போன்றவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகும்.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் தண்ணீர் அருந்தாமை தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த நேரம் இல்லாததால் தான் இதுபோன்ற பாதிப்புகள் எளிதில் ஏற்படுகிறது.
உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தாமை,சிறுநீரை அடக்கி வைத்தல் மற்றும் மோசமான உணவுப் பழக்கங்களால் தான் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது.சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளை சந்திப்பவர்கள் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,
அடிக்கடி தண்ணீர் தன்னீர்ட் பருகுவதன் மூலம் சிறுநீரகத் தொற்றை சரி செய்து கொள்ள முடியும்.வயிறு வீங்கும் வரை சிறுநீரை அடக்கி வைக்காமல் சீக்கிரம் அதை வெளியேற்றிவிட வேண்டும்.
யூரினரி இன்பெக்ஷன் இருந்தால் கால தாமதம் செய்யாமல் மருத்துவர் உதவியோடு அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.