இன்று சளி பிரச்சனை அனைவருக்கும் சகஜமாக ஏற்படுகிறது.குறிப்பாக குழந்தைகள் பலர் சளி தொந்தரவுகளால் அதிகம் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.குழந்தைகள்,பெரியவர்கள் யாருக்கு சளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி
2)துளசி
3)தேன்
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்தவும.பிறகு 10 துளசி இலைகள் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் மார்பு சளி,இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.
வெது வெதுப்பான நீரை பயன்படுத்தி நாசியை சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீரில் உப்பு கலந்து நாசி ஓட்டையில் விட்டால் கெட்டி சளி அனைத்தும் கரைந்து வெளியேறும்.உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் சளி தொந்தரவு,தொண்டை எரிச்சல்,கரகரப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
கருப்பு மிளகில் கஷாயம் செய்து குடித்தால் நெஞ்சில் கோர்த்திருக்கும் சளி அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.சுக்கு துண்டை இடித்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி,இருமல் பிரச்சனை சரியாகும்.
தூதுவளை இலை பொடி,ஓமவல்லி இலை பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சளி அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிது மிளகுத் தூள் கலந்து குடிக்க சளி தொந்தரவு நீங்கும்.