உங்களுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா? அதை சரி செய்ய தூதுவளையை இப்படி சாப்பிடுங்க!
இருமல் மற்றும் சளியை ஒன்றாக குணப்படுத்த தூதுவளையை நாம் பயன்படுத்தலாம். தூதுவளை கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நமக்கு சளி, இருமல் போன்ற தொற்றுக்கள் குணமாகின்றது.
தூதுவளை கீரையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நமக்கு பல ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைக்கின்றது. இந்த தூதுவளையை மட்டும் பயன்படுத்தாமல் அதனுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது சளி மற்றும் இருமல் இரண்டையும் குணப்படுத்தலாம். அது எவ்வாறு என்று தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* தூதுவளை
* முட்டை
* மிளகுத்தூள்
* வெங்காயம்
* நல்லெண்ணெய்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளை, சிறிதாக நறுக்கிய வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வதக்க வேண்டும்.
இறுதியாக இதில் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்றாக அனைத்தையும் வதக்கி பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும். இருமல் மற்றும் சளியை ஒன்றாக குணப்படுத்தும் மருந்து தயார். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் மற்றும் சளி குணமாகும்.