உங்களுக்கு திருநீறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? அப்போ இந்த நோய் நிச்சயம் வந்துவிடும்!!

Photo of author

By Divya

உங்களுக்கு திருநீறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? அப்போ இந்த நோய் நிச்சயம் வந்துவிடும்!!

இன்று பலருக்கு பல்பான்,பற்பொடி,திருநீறு சாப்பிடும் பழக்கம் இருக்கின்றது.அதிலும் திருநீறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநீறு சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.திருநீறை நெற்றிக்கு வைப்பதை விட அதை பலர் நன்றாக சாப்பிட பயன்படுத்திகின்றனர்.

இப்படி பலர் விரும்பி உண்ணும் திருநீறை நாட்டு பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.பசுஞ் சாணத்தை புகை மூட்டி சில நாட்கள் கழித்து திருநீறாக தயாரித்து கொடுக்கப்படுகிறது.

மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீறு எவ்வித மணமும் கொண்டிருக்காது.ஆகையால் அதில் வாசனைக்காக ஜவ்வாது மற்றும் டோலோமேட் கலக்கப்படுகிறது.

அதில் டோலோமேட்டில் அலுமினியம்,நிக்கல்,மெர்குரி,லெட் போன்ற உலோகங்கள் நிறைந்திருக்கிறது.இந்த டோலோமேட் கலந்த திருநீறை சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.

மாட்டு சாணத்தில் மட்டுமல்ல சங்கு ஓட்டில் இருந்தும் திருநீறு தயாரிக்கப்படுகிறது.உடலில் அதிகளவு வியர்வை வெளியேறினால் திருநீறு பூசி அதை கட்டுப்படுத்தலாம்.

திருநீறு சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்:

1)திருநீறு சாப்பிடும் பழக்கம் தொடர்ந்தால் வயிற்றுப்பகுதியில் அதிகமாக வலி ஏற்படும்.

2)உடலின் முக்கிய உள்ளுருப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் பாதிக்கும்.

3)ஒவ்வாமை ஏற்படும்.குழந்தைகளுக்கு திருநீறு சாப்பிடும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

4)கர்ப்பிணி பெண்களுக்கு திருநீறு சாப்பிடும் பழக்கம் இருந்தால் அது அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.