உலகிலேயே இந்தியர்கள் தான் காபி,தேநீரை அதிகம் பருகுகின்றனர் என்று ஆய்வு சொல்கிறது.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் டீ வைத்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.டீ குடிக்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளது என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஏன் நீங்களே கூட இப்படி சொல்லியிருப்பீர்கள்.
சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ குடித்து வயிற்று பசியை ஆற்றிக் கொள்கின்றனர்.இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செயல் அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.இதன் காரணமாகவே காலை நேரத்தில் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் அதிகளவு டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்தை பாதித்தவிடும்.காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்றுப்புண்,வயிறு எரிச்சல்,பித்தம் அதிகமாதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
அதேபோல் சிலர் ஒருநாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை.சிலருக்கு டீ தான் காலை உணவாக இருக்கின்றது.டீ குடிப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று சொல்லும் பொழுது ஒருமுறை வைத்த டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பருகினால் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள்.
ஒருமுறை தயாரித்த டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் அதன் நறுமணம் மற்றும் சுவை முற்றிலும் மாறிவிடும்.அடிக்கடி டீயை சூட்டுப்படுத்தி பருகினால் நீரிழிவு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தேநீரை நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கிவிடும்.
நீங்கள் குடிப்பது மூலிகை டீயாகவே இருந்தாலும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பருகும் பொழுது அவை ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும்.ஒருமுறை தயாரித்த டீயை மீண்டும் சூடுபடுத்தி பருகினால் வயிற்றுவலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
தேநீரை மீண்டும் சூடுபடுத்தி பருகுவதால் முகப்பரு,மன உளைச்சல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இனி ஒருமுறை தயாரிக்கப்பட்ட டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பருகுவதை தவிருங்கள்.