உங்களுக்கு மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்கு தான்!!

Photo of author

By Rupa

உங்களில் சிலருக்கு நாசி ஓட்டைகளில் கை விட்டு சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கும்.சிறு வயதிலேயே இந்த பழக்கம் உருவாகிவிடுகிறது.மூக்கு துவாரத்தில் விரல்களை விட்டு நோண்டுவதால் விரைவில் துவாரம் அகலமாகிவிடுகிறது.

மூக்கு ஓட்டைக்குள் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய விரல்களை பயன்படுத்துவதால் அது கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.மூக்கு நோண்டுவது அனைவரும் செய்யக் கூடிய சாதாரண விஷயம் தான் என்று அலட்சியம் கொண்டால் அது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பழக்கமாக மாறிவிடும்.

உங்களுக்கு மூக்கு நோண்டும் பழக்கம் நீண்ட காலமாக இருந்தால் அது உங்கள் நினைவாற்றலை மெல்ல மெல்ல குறைத்துவிடும்.மூளை மற்றும் மூக்கு அருகருகில் இருக்கும் உறுப்புகளாகும்.அப்படி இருக்கையில் நமது கை விரல்களில் அழுக்கு,பாக்டீரியாக்கள்,கிருமிகள் இருக்கும் பட்சத்தில் மூக்கு துவாரத்தில் விரல்களை விடும்போது அதில் இருக்கின்ற கிருமிகள் நாசி வழியாக மூளைக்கு சென்றுவிடும்.இதனால் மூளை செல்கள் சேதமாகி நோய் தொற்றுகள் ஏற்படத் தொடங்கிவிடும்.

விரல்களில் உள்ள பாக்டீரியாக்கள்,கிருமிகள் மற்றும் வைரஸ்கள் மூக்கு ஓட்டைக்குள் செல்லும் போது அவ்விடத்தில் அரிப்பு,எரிச்சல் ஏற்பட்டுவிடும்.சில சமயம் மூக்கு துவாரத்தில் புண்கள் ஏற்பட்டு கடுமையான வலி மற்றும் வீக்கம் உண்டாகிவிடும்.

மூக்கு நோண்டும் பழக்கம் நீண்ட காலமாக இருந்தால் நாசி ஓட்டை அகலமாகி முக அழகு குறைந்துவிடும்.முடிந்தவரை மூக்கு நோண்டும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.ஒருவேளை மூக்கு ஓட்டைக்குள் உள்ள அழுக்குகளை நீக்க விரல்களை பயன்படுத்துபவர்கள் அடிக்கடி சோப்,கிருமி நாசினிகளை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.