பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவரா? அப்போ இந்த ஷாக் நியூஸ் உங்களுக்கானது!!

0
78
Do you have a habit of sleeping during the day? Then this shock news is for you!!
Do you have a habit of sleeping during the day? Then this shock news is for you!!

நம் அனைவருக்கும் தூக்கம் மிக முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும்.உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் ஓய்வு கொடுக்க அவசியம் உறங்க வேண்டும்.நாள் முழுவதும் உழைக்கும் நாம் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டுமென்று ஆய்வு சொல்கிறது.

உறங்குவதால் உடல் சோர்வு நீங்குவதோடு உறுப்புக்கள் அனைத்தும் சீராக செயல்படும்.சிலர் மந்தமான தூக்கத்தை அனுபவிப்பார்கள்.சிலர் ஆழமான தூக்கத்தை அனுபவிக்கிறார்கள்.இது உடல் மற்றும் மனநிலையை பொறுத்து மாறுகிறது.

மனிதர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இரவு நேர தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.இதனால் மூளைக்கு உரிய ஓய்வு கிடைப்பதோடு அவை சுறுசுறுப்பாக இயங்கும்.தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பணிச்சுமை,மன அழுத்தம்,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் உரிய உறக்கம் இன்றி பலரும் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

இரவில் சரியாக உறங்காதவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருகிறது.இதனால் உடல் மந்தம் ஏற்படுகிறது.பகலில் குட்டி தூக்கம் போடுவதால் களைப்பு நீங்கும்.ஆனால் நாள்முழுவதும் உறங்குவது உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

நீங்கள் இரவில் உறங்கவில்லை என்றால் மன அழுத்தம்,கண் எரிச்சல்,உடல் சோர்வு ஏற்படும்.இரவில் உறங்காததால் உடல் சோர்வு ஏற்பட்டு பகலில் தூக்கம் வருகிறது.சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட உடனே உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இது ஆரோக்கியத்தை பாதிக்கும் செயல் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பகலில் உடல் சோர்வை உணரும் பொழுது ஒரு மணி நேரம் வரை உறங்கலாம்.இதனால் உடல் சோர்வு நீங்குவதோடு மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும்.ஆனால் எல்லா தினங்களிலும் பகல் நேர தூக்கத்தை அனுபவிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்திவிடும்.எனவே இரவில் குறைந்தது 8 மணி நேர உறக்கத்தை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்.

Previous articleமுகத்தில் மங்கு வந்துவிட்டதா? வடித்த கஞ்சியை இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் மறைந்துவிடும்!!
Next articleகுடலில் தேங்கிய கெட்ட GAS வெளியேற.. இந்த பொருட்களை அரைத்து சாப்பிடுங்கள்!!