உணவு உட்கொண்ட உடனே குளிக்கும் பழக்கம் கொண்டவரா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!!

Photo of author

By Vijay

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். சருமத்தில் உள்ள அழுக்கு, தூசு, வியர்வை அனைத்தும் நீங்கி உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ள தினமும் குளிக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் குளிப்பார்கள். சிலர் காலை மட்டுமின்றி வேலை இரவு நேரத்திலும் குளித்துவிட்டு தூங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.
ஆனால் எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் எப்படி குளிக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இன்றைய அவசர உலகில் குளிப்பதற்கு உரிய நேரத்தை நாம் ஒதுக்குவதில்லை. சிலர் இரண்டு நிமிடத்தில் குளித்துவிடுவார்கள். இது நேரத்தை மிச்சப்படுத்துவதாக தெரிந்தாலும் சரும ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
சிலர் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல நேரம் ஆகுது என்பதால் சீக்கிரம் உணவு கொண்டுவிட்டு பிறகு குளிப்பார்கள். இப்படி செய்தால் செரிமானப் பிரச்சனை, வயிறுக் கோளாறு,குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சாப்பிட்ட உடன் வயிறு நிரம்பிவிடும்.இந்த நேரத்தில் குளித்தால் அது வயிற்று உபாதைகளை ஏற்படுத்திவிடும். எனவே அதிகாலை அல்லது உணவு உட்கொள்வதற்கு முன் குளிப்பதே சிறந்தது.
அதிகாலை நேரத்தில் வெந்நீரில் குளிக்காமல் குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். குளிர்ந்த நீர் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இனி சாப்பிட்ட உடனே குளிக்கும் பழக்கத்தை தவிர்த்துவிட்டு அதிகாலை நேரத்தில் குளிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளியுங்கள். இப்படி செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.