உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

Divya

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்.இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஆசை,வாலி,வில்லன்,தீனா என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.கோலிவுட்டில் ரஜினி,கமல்,விஜய்க்கு அடுத்து அஜித் என்ற வரிசையில் இணைந்தார்.

சமீப காலமாக இவர் நடித்து வரும் படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த சில மாதங்களாக சொல்லப்பட்டு வருகிறது.ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.காரணம் படபிடிப்பிற்கான நாட்களை அஜித் ஒத்தி வைத்து கொண்டே செல்வது தான்.

இதனால் இவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க அஜித்துக்கு போட்டியாளராக இருந்த விஜய் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.ஒரு காலத்தில் சக நடிகர்களுக்கு போட்டியாளராக இருந்து வந்த அஜித் கடந்த சில ஆண்டுகளாக திரை வாழக்கை குறித்தோ,ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறித்தோ கண்டு கொள்ளாமல் ஜாலியாக பைக் ரைடு செய்து கொண்டு இருக்கிறார்.

முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,அஜித்தை வைத்து படம் எடுக்க விருப்பம் தெரிவித்தும் அதனை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கு சோறு போட்ட தொழில் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.