உங்கள் தலையில் பொடுகு அதிகமாக இருக்கா… பொடுகுத் தொல்லை போக இந்த இரண்டு பொருள்கள் போதும்…
நம் தலையில் உள்ள பல பிரச்சனைகளில் வெளியில் தெரிந்தால் அறுவறுக்கத்தக்க ஒரு பிரச்சனை என்ன என்றால் பொடுகு பிரச்சனை தான். இந்த பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு தலையில் பல பிரச்சனைகள் வரும்.
பொடுகால் தலையில் புண், சொறி போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும். பொடுகு இருப்பதால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய நாம் அதிகம் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வோம். பலவித எண்ணெய்கள், சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லாமல் இருக்கும். இந்த பதிவில் பல பிரச்சனைகளை தரும் இந்த பொடுகுத் தொல்லையை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.
இந்த பொடுகுத் தொல்லையை சரி செய்ய நமக்கு தேவையான பொருள்கள் வேப்பம் பூ மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமானது. இந்த வேப்பம் பூ மற்றும் தேங்காய் எண்ணெயை வைத்து எவ்வாறு பொடுகுத் தொல்லையை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்…
* தேங்காய் எண்ணெய்
* வேப்பம் பூ
இதை தயார் செய்யும் முறை…
வேப்பம் பூ எடுத்து அதை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பின்னர் அதில் 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து வாணலி ஒன்று வைத்துக் கொள்ளவும். அதில் 100 மிலி அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு அதில் 50 கிராம் அளவு காய்ந்த வேப்பம் பூவை எடுத்து அதில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு காய்ச்சிய பிறகு ஆற வைக்க வேண்டும். இளஞ்சூடாக வந்த பிறகு இந்த எண்ணெயை வேப்பம் பூவுடன் சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும். தலையில் தேய்த்த பிறகு அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பொடுகுத் தொல்லை விரைவில் நீங்கும்.